குட்டி இளவரசர் லூயிஸ்க்கு இன்று பிறந்த நாள்: சிறப்பு புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்டின் மூன்றாவது மகன் குட்டி இளவரசர் லூயிஸ் இன்று தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இந்த நேரத்தில் அவர் பொக்கை வாயைக் காட்டி சிரிக்கும் புகைப்படங்களை அரண்மனை வெளியிட்டுள்ளது.

புகைப்படங்களில் என்ன சிறப்பு என்றால் அவற்றை எடுத்தது, புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட இளவரசி கேட்தான்.

அம்மா எடுத்த புகைப்படங்களில் சிவந்த கன்னங்களும் பெரிய பழுப்பு நிறக் கண்களுமாக அப்படியே அம்மாவையே உரித்து வைத்தாற்போல் சிரிக்கிறார் குட்டி இளவரசர் லூயிஸ்.

இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காலை 11.01க்கு பிறந்தார்.

இதற்கும் முன் கேம்பிரிட்ஜ் குடும்ப கிறிஸ்துமஸ் அட்டையில் அம்மாவின் கையில் இருக்கும் கைக்குழந்தையாக பார்த்தது.

அதற்கு பிறகு இப்போதுதான் அவரது புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்