இழப்பால் இணைந்த இரு உள்ளங்கள்: இலங்கையில் பிணவறையில் பிள்ளைகளை தேடும்போது கிடைத்த நட்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரே ஹொட்டலில் தங்கியிருந்தாலும் பேசிக்கொள்ளாத இரு பிரித்தானியர்கள், தங்கள் பிள்ளைகளின் உடல்களை இலங்கை மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் தேடும்போது நண்பர்களாகியிருக்கிறார்கள்.

Matthew Linsey, தான் எப்படி தனது பிள்ளைகளின் உடல்களை தேடும்போது Ben Nicholsonஐ சந்தித்தார் என்பதை விவரித்துள்ளார்.

குண்டு வெடிக்கும்போது இரண்டு பேரின் குடும்பங்களும் இலங்கையிலுள்ள ஷாங்க்ரிலா ஹொட்டலில் தங்கியிருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகவில்லை.

முதல் குண்டு வெடிப்பில் Mr Nicholsonஇன் மனைவி Anita (42), அவரது மகன் Alex (14) மற்றும் மகள் Annabel (11) ஆகிய மூவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.

Mr Linsey, அவரது பிள்ளைகள் Daniel (19) மற்றும் மகள் Amelie (15) ஆகியோர் முதல் குண்டு வெடிப்பைக் கண்டு தப்பியோட முயலும்போது இரண்டாவது குண்டு வெடிப்பில் பிள்ளைகள் இருவரும் பலியாகியிருக்கிறார்கள்.

இறந்த தங்கள் பிள்ளைகளின் உடல்களை மருத்துவமனையில் தேடும்போது Matthew Linsey, Ben Nicholsonஐ சந்தித்திருக்கிறார்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு ஒருவரையொருவர் தேற்ற முயன்றோம் என்று கூறும் Mr Linsey (61), பிள்ளைகளை இழந்த இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம் என்கிறார்.

லண்டன் திரும்பியுள்ள Mr Linsey, தொடர்ந்து Mr Nicholsonஉடன் தொடர்பிலிருப்பதாக தெரிவிக்கிறார்.

அவர் ஒரு நல்ல மனிதர், இன்றும் அவரிடம் தொலைபேசியில் பேசினேன் என்று கூறும் Mr Linsey, தொடர்ந்து Nicholson தனது குடும்பத்தாரின் உடல்களை கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்