லொட்டரியில் மில்லியன் பவுண்டுகள் பரிசு பெற்ற இளம்பெண்ணின் வித்தியாசமான ஆசை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலேயே மிகவும் இளவயதில் லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு இளம்பெண்ணுக்கு வேலைக்கு போக ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

எடின்பர்க்கைச் சேர்ந்த Jane Park, 17 வயதே இருக்கும்போது லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றதன் மூலம் பிரித்தானியாவின் மிகவும் இள வயது கோடீஸ்வரர் ஆனவர் என்ற பெருமையை பெற்றார்.

சாதாரண நபர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு ஆடம்பர வாழ்வு வாழும் Jane Park, ஒன்றுமே செய்யாமல் நாள் முழுவதும் சும்மாவே இருப்பது போரடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஏதாவது வேலைக்கு போவதைப் பற்றிக்கூட பரிசீலித்து வருவதாக Jane Park தெரிவித்துள்ளார்.

லொட்டரியில் வென்ற பணத்தில் 50,000 பவுண்டுகளை மார்பக அழகு சிகிச்சை, புதிய பற்கள் பொருத்துதல் மற்றும் பின்னழகை பெரிதாக்குதல் என பல அழகியல் சிகிச்சைகளுக்காக செலவிட்டார் அவர்.

ஒரு முறை அழகியல் சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கும்போது ஒவ்வாமை ஏற்பட்டு உடல் முழுவதும் வீக்கமும் வலியும் ஏற்பட்டு Jane Park, கிட்டத்தட்ட உயிரிழந்து விடுவோமோ என்ற நிலைமைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்