வில்லியமை விட்டு விலகி செல்லும் ஹரி: மைத்துனருக்கு அறிவுரை வழங்கிய கேட்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்யும் விதமாக, இளவரசி கேட் ஹரிக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த அனைவருமே செயின்ட் ஜார்ஜ் சேப்பல் முன்பு கூடியிருந்தனர்.

அங்கு ராணியை வாழ்த்துவதற்கு முன்பாக இளவரசர்கள் வில்லியம் - ஹரி ஒன்றாக நில்லாமல் சாரா மற்றும் மைக் டிண்டால் ஆகியோரின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும், இளவரசர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கருத்து கூற ஆரம்பித்தனர்.

அதனை உறுதி செய்யும் விதமாக, ஈஸ்டர் முடிந்த அன்றைய தினம் மாலை நேரத்தில் மேகனை சந்திப்பதற்காக இளவரசி கேட் தன்னுடைய கணவருடன் மேகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இளவரசர்கள் இருவரையும் கேட் சமாதானம் செய்ய முயன்றதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்படி, இளவரசர் வில்லியமை திருமணம் செய்ததிலிருந்தே நெருக்கமாக இருந்த இரண்டு சகோதரர்களை பற்றியும் கேட் நன்கு அறிந்துகொண்டார்.

தன்னுடைய மைத்துனருக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்த கேட், சாதாரண விடயங்களுக்காக கூட பலமுறை அவருக்கு அறிவுரை வழங்கி வந்திருக்கிறார். அதனை மறுக்காமல் ஹரியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வெறும் உணர்வுக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த முடியாட்சிக்கும் அவர்களின் கூட்டு பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலே, வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரை பற்றி கேட் அறிந்து வைத்திருந்துள்ளார்.

வில்லியம் மற்றும் கேட் ஆகியோருக்கு இடையில் பல முறை கருத்து வேறுபாடு ஏற்படுகையில், ஹரி தனது சகோதரருக்கு ஆலோசனையாக செயல்பட்டார். அவர்கள் மூன்று பேரும் மிகப்பெரிய கூட்டாளிகளாகவே இருந்துள்ளனர்.

இத்தகைய இளவரசர்கள் தற்போது வாழ்க்கையின் இருவேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்கும் விதமாக இளவரசி கேட், தன்னுடைய மைத்துனருக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

பின் வரும் நாட்களில் வில்லியம் பிரித்தானியாவின் மன்னாராகிவிடுவார் என்பதால், மேகனை சந்திப்பதற்கு முன்னே இளவரசர் ஹரி தனக்கான பாதையினை உருவாக்கி கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்