பிரித்தானியாவில் பட்டப்பகலில் மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்: தாக்கி விட்டு தப்பிய மாணவி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மாணவி ஒருத்தியை மர்ம நபர் ஒருவர் கடத்த முயல, அந்த மாணவி அவரை முரட்டுத்தனமாக தாக்கியதால் அவளை விட்டு விட்டு தப்பி ஓடினார் அந்த நபர்.

Leeds பகுதியில் அந்த 12 வயது மாணவி பள்ளிக்கு செல்லும்போது, ஒருவர் அந்த மாணவியை இடுப்பைப் பிடித்து தூக்கி, மறைவாக புதர்கள் உள்ள பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

தைரியசாலியான அந்த மாணவி முரண்டு பிடித்து முரட்டுத்தனமாக அவரைத் தாக்கி அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் அந்த நபரை வீடியோ எடுக்க, அதைக் கண்டதும் அந்த நபர் அந்த மாணவியை பின்தொடர்வதை விட்டு விட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

அந்த வீடியோவை அந்த பெண், பொலிசாரிடம் ஒப்படைக்க, அந்த வீடியோ மற்றும் CCTV கெமரா காட்சிகளை வெளியிட்டு பொலிசார் அந்த மர்ம நபரைத் தேடி வருவதோடு அவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்