பிரித்தானிய மாணவியை பட்டபகலில் கடத்த முயன்ற நபர் சிக்கினார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி ஒருத்தியை கடத்த முயன்ற மர்ம நபர் சிக்கினார்.

Leeds பகுதியில் அந்த 12 வயது மாணவி பள்ளிக்கு செல்லும்போது, அந்த நபர் அந்த மாணவியை இடுப்பைப் பிடித்து தூக்கி, மறைவாக புதர்கள் உள்ள பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

தைரியசாலியான அந்த மாணவி முரண்டு பிடித்து முரட்டுத்தனமாக அவரைத் தாக்கி அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் அந்த நபரை வீடியோ எடுக்க, அதைக் கண்டதும் அந்த நபர் அந்த மாணவியை பின்தொடர்வதை விட்டு விட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

அந்த பெண் எடுத்த வீடியோ மற்றும் CCTV கெமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் West Yorkshire பொலிசார் 18 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் யார் என்ற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை.

பள்ளி மாணவியை கடத்தியதாக Leeds பகுதியைச் சேர்ந்த அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தங்கள் மகளை கடத்த முயற்சி நடந்ததையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

விசாரணை நடந்து வரும் அதே நேரத்தில், அந்த மாணவியின் குடும்பத்திற்கு தங்கள் பாதுகாப்பை உறுதியளிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்