இளவரசி டயானாவின் உடலை அடையாளம் காட்டிய மருத்துவர் மீது வழக்கு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்தபோது அவரது உடலை அடையாளம் காட்டியவரான மருத்துவர் ஒருவர் மீது, மருத்துவ கவனக் குறைவினால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இளவரசி டயானாவின் தனிப்பட்ட மருத்துவரான Dr Peter Wheeler, தனது கவனக்குறைவால் Stefanos Vavalidis (69) என்னும் வங்கியாளர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

Stefanos தோல் பிரச்சினைக்காக மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் Dr Peterஇடம் அவர் சிகிச்சை பெற வந்தபோது, அவரது மருத்துவ சிகிச்சைகள் குறித்து சரியாக படிக்காமலே 23 மருந்துகளை தொடர்ந்து அளித்துள்ளார் அவர்.

இதனால் உள்ளுறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் Stefanos. அதற்காக விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான Dr Peter, தான் வரிசையாக பல தவறுகளை செய்துள்ளதாகவும், இல்லையென்றால் Stefanos மேலும் ஒரு 18 மாதங்கள் வாழ்ந்திருப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு அவரது உயிரிழப்புக்கு தான் மட்டுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் Stefanosஇன் குடும்பம் சார்பில் 300,000 பவுண்டுகள் இழப்பீடு கோரி Dr Peter மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்