லண்டனில் சிறப்பாக நடைபெற்ற பூபாள ராகங்கள் கலைவிழா

Report Print Dias Dias in பிரித்தானியா
342Shares

ஈழத் தமிழ்க் கலைஞர்களை முன்னிறுத்தி ஒழுங்கு செய்யப்பட்ட லண்டன் பூபாள ராகங்கள் கலைவிழா கடந்த சனிக்கிழமையன்று ஹரோ ஆர்ட்ஸ் செண்டரில் சிறப்பாக நடைபெற்றது.

யாழ் கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறையின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் பத்தாவது முறையாக லண்டனில் நடைபெற்ற பூபாள ராகங்கள் நிகழ்வுக்கு இங்கிலாந்து மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் இருந்து பாடகர் என் ரகுநாதன், அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத் தமிழ் பொப்பிசை பிதா நித்தி கனகரத்தினம், இந்திய சூப்பர் சிங்கர் போட்டியில் திறமை காண்பித்து ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளம் பாடகி சரிகா நவநாதன் ஆகியோரோடு ஐபிசி தமிழின் தங்கத் தமிழ்க்குரல் தேடலின் இறுதிச்சுற்றுப் போட்டியாளர்களில் ஒருவராக வந்த நவீனா பிரணவரூபன் முதலான லண்டனைச் சேர்ந்த திறமை மிக்க கலைஞர்கள் பலரும், ஐரோப்பாவின் புகழ் பெற்ற இசைக்குழுவான துஷி, தனு மற்றும் நண்பர்கள் இசை வழங்க லண்டன் பூபாள ராகங்கள் பத்து நிகழ்ச்சியில் மேடையேறியிருந்தனர்.

க. பாலேந்திராவின் இயக்கத்தில் ‘நீண்ட ஒரு பயணத்தில்’ நாடகத் தொகுப்பும் ராகினி ராஜகோபாலின் நாட்டியாலயா மாணவர்கள் வழங்கிய நடன நிகழ்ச்சிகளும் விழாவுக்கு அழகு சேர்த்தன.

நமது கலைஞர்களுக்கான மேடையாக பூபாள ராகங்கள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாக மகாலிங்கம் சுதாகரன் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

பிரித்தானிய வாழ்வுக்கு தமிழ்ச்சமூகம் அரும்பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும் இப்படியான நிகழ்வொன்றை ஒழுங்கு செய்தமைக்காக கம்பர் மலை வித்தியாலயம், கொம்மந்தறை, ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் விடுத்துள்ள சிறப்புச் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

x

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்