பிரித்தானியாவில் இந்திய வம்சாளியினருக்கு 6 ஆண்டுகள் சிறை... என்ன குற்றம் செய்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடிபோதையில் அபாயகரமாக காரை ஓட்டி ஒருவர் மீது மோதி கொன்ற இந்திய வம்சாவளி நபருகு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கரென் தயாள்(47) என்பவர் பிரித்தானியா தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் திகதி அதிகாலை குடிபோதையில் தன்னுடைய பென்ஸ் காரை ஓட்டி வந்துள்ளார்.

வடமேற்கு லண்டன் சாலையில் மணிக்கு 30 மைல் வேகத்துக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 76 மைல் வேகத்தில் காரை ஓட்டிவந்த இவர், சாலையோரத்தில் நின்றிருந்த வாடகை காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வாடகை காரின் டிரைவரான அன்வர் அலி(55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் காயங்களுடன் இருந்த தயாளுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் அவரிடம் மேற்கொள்ள விசாரணையில் குடி போதையில் காரை ஓட்டி வந்தது உறுதிபடுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, லண்டனில் உள்ள உட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் பொலிஸ் தரப்பு வக்கீல் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து வாதாடினார்.

இதன் அடிப்படையில் அவர் குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிப்பது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்கரென் தயாளுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்