உணவகத்தில் குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு ஏற்பட்ட அசௌகரியம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தையுடன் உணவகம் சென்றிருந்த ஒரு பெண் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட, குழந்தையை துணியால் மறைத்துக் கொள்ளுமாறு உணவக ஊழியர் கூறிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Birminghamயிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் Becky Bolger (30) என்னும் பெண்ணும் அவரது சகோதரியும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது Beckyயின் குழந்தை அழவே, அவனுக்கு பாலூட்டியிருக்கிறார் அவர். அங்கு வந்த உணவக ஊழியர் ஒருவர், குழந்தையின் தலையை துணியால் மூடி மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்குமாறு கூறியிருக்கிறார்.

குழந்தையின் தலையை மூடினால் அவன் இன்னும் அழுது கலாட்டா செய்வான் என்பதை விளக்கியுள்ளார் Becky.

அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டாலும், சத்தமிடுவதால் மேலும் பிரச்சினைதான் பெரிதாகும் என்பதால் அங்கிருந்து தனது சகோதரி மற்றும் குழந்தையுடன் வெளியேறியிருக்கிறார் Becky.

அதே உணவகத்திலுள்ள மதுபான விடுதிக்கு தாங்கள் முன்பு வந்திருக்கும்போது பெண்கள் தங்கள் உடல் பாகங்கள் தெரியும் வகையில் நடந்து கொண்டிருப்பதை நினைவு கூர்ந்த Becky, அதைவிட பாலூட்டுவது மோசமல்ல என்கிறார்.

நடந்த சம்பவம் குறித்து Beckyயின் கணவர் புகாரளிக்க, அந்த உணவகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தங்கள் உணவகம் பாலூட்டும் தாய்மாரை வரவேற்பதாகவும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த ஊழியர் தவறு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சமத்துவ சட்டம் 2010-ன்படி தாய்ப்பாலூட்டும் பெண்ணை பொது இடத்திலிருந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவது சட்ட விரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers