குழந்தை பிறந்ததும் அமெரிக்காவில் புதிய வீடு வாங்கவிருக்கும் ஹரி-மேகன்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு குழந்தை பிறந்ததும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புதிய வீடு ஒன்று வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகனுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்க உள்ளது.

இதனை எதிர்பார்த்து அரச விசுவாசிகள் பலரும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் குழந்தை பிறந்ததும் இளவரசி மேகன், தெற்கு கலிபோர்னியாவில் நகரத்தில் ஒரு புதிய வீடு வாங்க இருப்பதாக அரண்மனை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த நகரம், வாழ்க்கை மற்றும் காலநிலைகளை முன்னாள் நடிகையான மேகன் அதிகம் நேசிக்கிறார். கலிபோர்னியா பெண்ணான மேகன் தான் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அருகிலேயே வீடு வாங்க உள்ளார்.

மேகன் பிரித்தானியாவின் சீமாட்டியாக இருக்கலாம், ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் பொறுத்தவரை அவர் தான் ராணி என அந்த ஆதாரம் தெரிவிக்கிறது.

மேகன் அரண்மனையிலிருந்து சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருக்க விரும்புகிறார். அமெரிக்காவிற்கு செல்வதன் மூலம், அவளைச் சுற்றியிருக்கும் மக்களுடன் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் எளிதில் பழக முடியும் என அவர் எண்ணுவதாகவும் தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers