பிரித்தானியாவில் உலா வரும் கத்தி ஏஞ்சல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரத்தில் உள்ள விக்டோரியா சதுக்கத்திற்கு கத்தியால் செய்யப்பட்ட மாபெரும் ஏஞ்சல் சிற்பம் வந்துள்ளது.

பர்மிங்காம் நகரசபைத் தலைவர் இயன் வார்டு மற்றும் பிரிட்டிஷ் அயர்ன்வேர் சென்டர் தலைவர் கிவ்வ் நோல்ஸ் ஆகியோருடன் திரு ஜமேசன் இணைந்து இச்சிற்பத்தை பர்மிங்காம், விக்டோரியா சதுக்கத்திற்கு வரவேற்றனர்.

பிரித்தானியாவில் அதிகாரித்து வரும் கத்தி குற்றத்தை பிரதிபலிக்கும் வகையிலலே இந்த மாபெரும் ஏஞ்சல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 27 அடி உயரமுள்ள இராட்சத சிற்பத்தை ஆல்பி பிராட்லி என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார்.

நாட்டில் அதிகாரித்து வரும் கத்தி குற்றங்கள் மற்றும் வன்முறைக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிற்பத்தை உருவாக்கியதாக பிராட்லி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் பொலிசார் கைப்பற்றிய 10,000 கத்திகளை கொண்டு இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவென்ட்ரி நகரில் தேவாலயத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கத்தி ஏஞ்சல் சிற்பம் பர்மிங்காம் வந்துள்ளது. பர்மிங்காமில் ஒரு மாத காலம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவென்ட்ரி, பர்மிங்காம் நகரங்களை தொடர்ந்து லிவர்பூல் மற்றும் ஹல் என பிரித்தானியா முழுவதும் கத்தி ஏஞ்சல் சிற்பம் உலா வரும் என பிராட்லி தெரிவித்துள்ளார்..

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்