அம்மாவை போலவே இருக்கிறார் குட்டி இளவரசர்: ரசிகர்களின் ரியாக்‌ஷன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெகு நாட்களாக இளவரசர் ஹரி, மேகனின் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருந்த அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.

குட்டி இளவரசரின் முதல் புகைப்படத்தைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீருடன், அம்மாவைப் போலவே இருக்கிறார் குட்டி இளவரசர் என்கிறார்கள் ரசிகர்கள்.

முதல் முறையாக தங்கள் குழந்தையை ஊடகவியலாளர்கள் முன் அறிமுகம் செய்தபோது, குழந்தை யாரைப்போல் இருப்பதாக எண்ணுகிறீர்கள் என்று ஹரியிடம் கேட்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் குழந்தையின் சாயல் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை என்றார் ஹரி.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த உடன்தானே, குழந்தை, அம்மா மேகனைப்போலவே இருக்கிறது என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள் மக்கள்.

ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் குட்டி இளவரசருக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்