மேகன் குழந்தைக்கு அரச தலைப்பு கிடையாது... அதற்கு பதிலாக இப்படி தான் அழைப்பார்களாம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இளவரசி மேகன், கடந்த திங்கட்கிழமையன்று அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மனைவியை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருந்த இளவரசர் ஹரி, இன்று மேகனுடன் தன்னுடைய குழந்தையை கையில் ஏந்தியபடியே வின்ட்சர் கோட்டையில் தோன்றினார்.

மேகனின் விருப்பமான அமெரிக்க புகைப்பட கலைஞர் இதனை படமாக பதிவு செய்திருந்தார்.

அதன்பிறகு முதல் ஆளாக பிரித்தானிய ராணி மற்றும் இளவரர் பிலிப் தங்களுடைய பேரக்குழந்தையை வின்ட்சர் கோட்டையில் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களுடன் மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் இருந்தார்.

இந்த நிலையில் மேகனுக்கு பிறந்த குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என ஹரி - மேகன் தம்பதியினர் பெயர் வைத்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மேகனின் குழந்தைக்கு 'கேம்பிரிட்ஜஸ்' போன்ற எந்த அரச தலைப்பும் கிடையாது. அதற்கு பதிலாக 'மாஸ்டர் ஆர்ச்சி' என அழைக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்