மேகன் குழந்தையின் பெயரை முன்னமே கணித்திருந்த குட்டி இளவரசர் ஜார்ஜ்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயரை, குட்டி இளவரசர் சார்லஸ் முன்னமே கணித்து கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதியினருக்கு கடந்த திங்கட்கிழமையன்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை இன்று வெளியிட்ட தம்பதியினர், குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என பெயரிட்டுள்ளதாகவும் அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குழந்தைக்கு 'ஆர்ச்சி' என பெயரிடுவார்கள் என்று இளவரசர் வில்லியமின் மூத்த மகன் ஜார்ஜ் முன்பே கணித்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு முன்னதாக சிறிய இளவரசர் ஜார்ஜ் தனது சகோதரி மற்றும் பாட்டி கரோல் மிடில்டன் வெளியே இருந்த போது, நான் என்னுடைய நாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன்.

அப்போது இளவரசரிடம் பிறக்கப்போகும் குழந்தை குறித்து கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் சிரித்திக்கொண்டே, பிறக்க உள்ள குழந்தையை 'ஆர்க்கி' என்று தான் அழைப்பேன் என அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை ஏன் ஆர்ச்சி என்று அழைத்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் அதை அழகாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்