தூக்கமில்லாத உலகத்திற்கு வரவேற்கிறோம்... குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஹாரியை கேலி செய்த வில்லியம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியானிய இளவரசர் வில்லியம் தூக்கமில்லா உலகத்துக்கு வெல்கம் என்று ஹரியை கேலி செய்து பேசியுள்ளார்.

பிரித்தானியா அரச குடும்பத்தில் இளவர்சர் ஹரிக்கும், அவரது மனைவி மேகன் மார்க்கலுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை பக்கிங்ஹாம் அரணமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதோடு, தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மகன் பிறந்த சந்தோஷத்தில் இளவரசர் ஹாரி மிகவும் உணர்ச்சிவசப்பட்டும், சந்தோசத்தை அடக்க முடியாமல் பத்திரிக்கையாளர் முன்பு பேசிய வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

மேலும், நேற்றும் இளவரசர் ஹாரி மற்றும் மேர்கன் முதன் முறையாக வெளியுலகத்திற்கு தங்கள் குழந்தையை அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது மேகன், உலகின் சிறந்த இரண்டு ஆண்கள் என்னிடம் இருக்கிறார்கள். நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். என் மகன் மிக அமைதியாக இருக்கிறான் என்று கூற, ஹாரியோ அந்த அமைதி யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லையே என்று மனைவியைச் செல்லமாக கேலி செய்கிறார்.

தவிர, தம்பி ஹாரிக்கு குழந்தைப் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அண்ணன் இளவரசர் வில்லியம் தன் தம்பியிடம், தூக்கமில்லாத உலகத்துக்கு உங்களையும் வரவேற்கிறோம்.

அதுதான் குழந்தை வளர்ப்பு என்று ஜோக் அடித்திருப்பதும் ராயல் தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இளவரசன் - இளவரசியே என்றாலும் குழந்தைப் பெற்றால் இரவுகளில் தூக்கமில்லை என்பது தான் அவர் இப்படி கூறியிருப்பதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்