குட்டி இளவரசரால் வேலை பறிபோன பிரபல ஊடகவியலாளர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று குட்டி இளவரசரை கிண்டல் செய்த தமது ஊடகவியலாளரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

பிரபல தனியார் செய்தி ஊடகத்தின் வானொலி தொகுப்பாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் மனிதக்குரங்கின் புகைப்படத்தை பதிவிட்டு, குட்டி இளவரசர் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறார் என பதிவு செய்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த தனியார் செய்தி ஊடகம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

Danny Baker என்ற அந்த வானொலி தொகுப்பாளர் குறித்த செய்தி ஊடகத்தில் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தமது டுவிட்டர் பதிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Danny Baker அந்த பதிவை நீக்கியுள்ளார். மட்டுமின்றி மன்னிப்பும் கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers