இலங்கைக்கு தேனிலவு வந்த மனைவிக்கு நேர்ந்த கதி: லண்டன் செல்ல முடியாமல் தவிக்கும் கணவன்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டன் தம்பதியினர் இலங்கைக்கு தேனிலவு சென்றிருந்த நிலையில் அங்கு உடல்நலக்குறைவு காரணமாக மனைவி திடீரென உயிரிழந்துவிட்டதால் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லமுடியாத நிலைக்கு கணவர் ஆளாகியுள்ளார்.

லண்டனின் Brent பகுதியில் ஏப்ரல் 14 ஆம் திகதி Khilan Chandaria மற்றும் Usheila Patel ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமண வாழ்வில் இணைந்த புதுமண தம்பதியினர் இரண்டு வாரம் இலங்கைக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

காலேவில் உள்ள Amari ஹொட்டலில் தங்கியிருந்த புதுமணத்தம்பதியினர் வோட்கா, சிப்ஸ் மற்றும் சாண்ட்விச்ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் புதுமண தம்பதியினர் நிலைகுலைந்து விழுந்த நிலையில், உடனடியாக ஹொட்டல் ஊழியர்களை தொடர்பு கொண்ட கணவர், நானும் எனது மனைவியும் ரத்த வாந்தி எடுப்பதாகவும், முதலுதவி தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

உடனே விரைந்து வந்த ஊழியர்கள் தம்பதியினரை மீட்டு Co-operative மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் மனைவியின் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் Karapitiya மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிக நீர்ப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக Usheila Patel இறந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் அவள் இல்லாமல் எனது நாட்டிற்கு என்னால் திரும்பி போக இயலவில்லை என Khilan Chandaria கூறியுள்ளார். மேலும், பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் இலங்கை நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளதாக Khilan தெரிவித்துள்ளார்.

Usheila Patel இன் பெற்றோர் கூறியதாவது, ஆரோக்கியமாக தேனிலவு சென்ற மகள் எங்களை விட்டு சென்றுவிட்டாள், கடைசியாக அவளது முகத்தை ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

வெளிவிவகார மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, இறந்துபோன பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து ஆதரவுகளை வழங்குகிறோம், அவர்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஹொட்டல் நிர்வாகத்திடமும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்