லிப்டில் இரண்டு நாட்கள் சிக்கி தவித்த இளம்பெண்: சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த அவலம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் லிப்ட் ஒன்றில் சிக்கிக் கொண்ட ஒரு பெண் உயிர் வாழ்வதற்காக தனது சிறுநீரையே குடிக்கும் அவலத்திற்குள்ளாகியிருக்கிறார்.

பிரித்தானியாவின் Kent பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் வேலை செய்து வந்தார் அந்த பெண்.

குறித்த நேரத்திற்கு அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

வெள்ளிக்கிழமை காணாமல் போன அவரை ஞாயிறு மதியம்தான் பொலிசாரால் கண்டுபிடிக்க முடிந்தது.

அவர் தான் வேலை செய்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் ஒன்றினுள் சிக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தனர் பொலிசார்.

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் யாரும் அவரை லிப்டில் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டிருக்கிறது.

தப்ப முயற்சி மேற்கொண்டதில் உடலில் ஏற்பட்டிருந்த கீறல்களுடன் அவரை மீட்ட பொலிசார், மருத்துவ பரிசோதனைகளுக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

50 வயதுகளிலிருக்கும் அந்த பெண் இரண்டு நாட்களாக நீர்ச்சத்தை இழந்து உயிரிழந்து விடாமல் இருப்பதற்காக தனது சிறுநீரையே குடித்து வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்