பிரித்தானியாவில் கால்பதித்தார் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி: என்ன வாங்கினார் தெரியுமா?

Report Print Basu in பிரித்தானியா
2453Shares

ஆசியா கண்டத்திலே மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிரித்தானியாவில் கால்பதித்துள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் லண்டனில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 68 மில்லியன் பவுண்டுக்கு (அதாவது ரூ.620 கோடி) விலைக்கு வாங்கியுள்ளது.

259 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை சீனா, ஹாங்காங்கை சேர்ந்த C.Banner-ரிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் குளோபல் ஹோல்டிங்ஸின் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை வாங்குவதற்கான ஒரு உறுதியான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக ரிலையன்ஸ் பிராண்ட்கள் சி. பன்னர் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தின் மாஸ்டர் உரிமையாளராகவும் 29 நகரங்களில் 88 அங்காடிகளை இயக்கியும் வருகிறது.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பிராண்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தர்சன் மெஹ்தா கூறுகையில், ஹாம்லேஸ் குளோபல் வர்த்தகத்தை கையகப்படுத்தல் மூலம் உலகளாவிய சில்லறை விற்பனையில் முன்னணியில் ரிலையன்ஸ் இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் உலகளாவிய ரீதியில் ஹாம்லேஸ் நிறுவனத்துக்கு 18 நாடுகளில் 167 கடைகள் உள்ளன.

அதோடு இதுவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடவில்லை, ஆனால் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தை கையகப்படுத்துகையில் இது உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers