குட்டி இளவரசர் ஆர்ச்சியின் ஞானத்தந்தையாகும் சர்ச்சைக்குரிய நபர்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற டாம் ஸ்கிப்பி என்பவர் ஞானத்தந்தையாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் மேகன் மெர்க்கல் தொடர்பில் ஹரியிடம் வாதிட்டதாகவும், அதனாலையே ஹரி அவரை புறக்கணித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த மே மாதம் நடைபெற்ற ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமண விருந்திலும் ஸ்கிப்பி மற்றும் அவரது மனைவி லாராவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தற்போது தமக்கு குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து, இளவரசர் ஹரி தமது நெருங்கிய நண்பரான ஸ்கிப்பியை தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியான அந்த தகவலை தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட பல மாதங்களுக்கு பின்னர் ஸ்கிப்பி இளவரசர் ஹரியை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டி இளவரசர் ஆர்ச்சியின் ஞானப்பெற்றோராக ஸ்கிப்பியுடன் டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், மேகனின் ஸ்டைலிஸ்ட் ஜெசிகா முல்ருனி, அவரது நெருங்கிய நண்பர் பெனிட்டா லிட், ஸாரா டிண்டால் மற்றும் இளவரசி யூஜீன் ஆகியோர் தெரிவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதாகும் டாம் ஸ்கிப்பி ஏட்டன் கல்லூரி காலகட்டத்தில் இருந்தே இளவரசர் ஹரியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

மட்டுமின்றி இருவரும் ஒன்றாக பலமுறை இரவு விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் லாஸ் வேகாஸ் ஹொட்டலில் உள்ள தனி அறையில் இளவரசர் ஹரி இளம்பெண்களுடன் நிர்வாணமாக பில்லியர்ட்ஸ் விளையாடியதாக வெளியான புகைப்படத்தில் ஸ்கிப்பியும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹரியுடன் வாதிட்டவர் ஸ்கிப்பி.

இந்த விவகாரம் மேகனுக்கும் ஹரிக்கும் இடையே வாக்குவாதத்தையும் மனக்கசப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மேகன் தங்களது திருமண விழாவில் ஸ்கிப்பி மற்றும் அவரது மனைவியை அழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்