Brexit : பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறாது?: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவு தலைகீழாக மாறுவதற்கும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனேயே இணைந்திருப்பதற்கும் 20 முதல் 30 சதவிகித வாய்ப்புகள் உள்ளன என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Donald Tusk பிரித்தானிய அரசியலில் தற்போது நிலவும் செயலற்ற தன்மையை மேற்கொள்வதற்கு இன்னொரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலந்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த Donald Tusk, 2016 வாக்கெடுப்புக்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லையென்றும், இரண்டாவது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, 1975ஆம் ஆண்டின் வாக்கெடுப்பின் முடிவை மாறக்கூடியதாக இருந்ததென்றால், இன்னொரு வாக்கெடுப்பை நடத்துவதும் சாத்தியம்தான் என்றார் அவர்.

பிரெக்சிட்டின் பின்விளைவுகள் குறித்த உண்மையான விவாதம், வாக்கெடுப்பு பிரச்சாரத்திற்கு முன்னரோ அல்லது பிரச்சாரத்தின்போதோ தொடங்கவில்லை, அது வாக்கெடுப்புக்கு பின்னர்தான் தொடங்கியது என்றார் அவர்.

இன்றைய நிலவரப்படி, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனேயே இணைந்திருப்பதற்கு 20 முதல் 30 சதவிகித வாய்ப்புகள் உள்ளன, உண்மையில் அது மிகவும் அதிகம் என்றார் Donald Tusk.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers