உலகின் முதல் ஆளில்லா சரக்குக் கப்பல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உணவாக பயன்படும் சிப்பிகளை சுமந்து கொண்டு பிரித்தானியாவிலிருந்து பெல்ஜியம் சென்ற ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் கப்பல் ஒன்று உலகின் முதல் ஆளில்லா சரக்கு கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

5 கிலோகிராம் பிரித்தானிய சிப்பி உணவை சுமந்து கொண்டு வெற்றிகரமாக பெல்ஜியம் சென்று திரும்பியுள்ளது அந்த (குட்டிக்) கப்பல்.

பெல்ஜியம் சென்று சிப்பிகளை இறக்கி விட்டு, சில பெல்ஜிய பீர் பாட்டில்களுடன் பத்திரமாக திரும்பியது அந்த கப்பல்.

Essexஇலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இரண்டு ஊழியர்கள் இந்த 22 மணி நேர பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்கள்.

மனிதர்கள் ஒருவர் கூட பயணிக்காத அந்த கப்பல் உலகின் ஆளில்லா முதல் சரக்கு கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்