இளவரசி மேகன் போலவே தோற்றமளிக்க £23,000 செலவு செய்த இளம்பெண்: தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் போலவே தோற்றத்தில் மாறுவதற்காக இளம்பெண் ஒருவர் பல்வேறு சிகிச்சைகளுக்காக இதுவரை £23,000 பணம் செலவு செய்துள்ளார்.

தன்யா ரிக்கார்டோ (30) என்ற பெண் மேகனின் தீவிர ரசிகையாவார். இதையடுத்து மேகன் போலவே தனது உருவமும், தோற்றமும் மாற வேண்டும் என விரும்பினார்.

அதன்படி தனது கன்னங்கள், கண்கள், தாடை, மார்பகங்கள், உதடுகளில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் ஆப்ரேஷன்களை தன்யா செய்து கொண்டுள்ளார். இதற்காக £23,000 பணம் செலவு செய்துள்ளார்.

தற்போது மேகன் போலவே தான் இருப்பதாக பலரும் கூறுவதாக மகிழ்ச்சியுடன் தன்யா கூறுகிறார்.

தன்யா கூறுகையில், எனக்கு சாப்பிடுவதில் பிரச்சனையை ஏற்படுத்தும் நோய் இருப்பதாக பலரும் கிண்டல் செய்வார்கள், எனெனில் நான் அந்தளவுக்கு ஒல்லியாக இருப்பேன்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிகிச்சை மேற்கொண்டு சரியாக சாப்பிட்டு வந்தேன். தற்போது அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நான் மேகன் போலவே இருப்பதாக உணர்கிறேன், எனக்கும் மேகனுக்கு பல ஒற்றுமைகள் உள்ளது, எங்கள் தலைமுடி நிறம் ஒரே மாதிரி இருக்கும், அதே போல எங்களின் கண்கள் மற்றும் மூக்கும் ஒரே மாதிரி இருக்கும்.

நானும் மேகனும் ஒரே மாதிரி இருப்பதாக பலரும் கூறுகிறார்கள், இதை கேட்கும் போது நான் நினைத்த விடயத்தை அடைந்த உணர்வு ஏற்படுகிறது.

பெரிய நடிகையாகவும், மொடலாகவும் ஆகவேண்டும் என்பதே என்னுடைய கனவு என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்