பிரித்தானியாவில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து, பயணிகள் மற்றும் விமானியை முன்னாள் ராணுவ வீரருடன் சேர்ந்து வாகன ஓட்டிகள் சிலர் வெளியில் இழுத்து காப்பாற்றியுள்ளார்.
வேல்ஸ் நாட்டில் இருசக்கர வாகனம் செல்ல கூடிய சாலையில், 6 பேருடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக விமானம் திடீரென தரையில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து, விமானத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்க ஆரம்பித்துள்ளனர்.
முதல் ஆளாக ஜோயல் ஸ்னர் (35) என்கிற முன்னாள் ராணுவ வீரர் வேகமாக ஓடிச்சென்று, உள்ளிருந்த ஆட்களை வெளியில் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதிகமான தீ பிழம்புகளின் காரணமாக விமானத்தின் பாகங்கள் உருக ஆரம்பித்துள்ளன. அப்போது தான் ஹீரோ போல செயல்பட்ட டேனியல் நிக்கல்சன் (46) என்பவர், விமானத்தின் முன் பக்க கண்ணாடியை காலால் எட்டி உடைத்து, உள்ளிருந்தவர்களை வெளியில் இழுக்க ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நடைபெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், லேசான காயங்களுடன் இரண்டு பேர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.