கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார்.

தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth Martin (18) திடீரென கடுமையான வயிற்று வலிக்கு ஆளானார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பார்த்த ஒரு நர்ஸ் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கூற, திகைத்தார் Beth.

ஆனால், மெல்லிய இடுப்பு கொண்ட Bethஇன் வயிறு கண் கூடாக பார்க்கும் அளவுக்கு பெரிதாகவே இல்லை.

எல்லை பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்ற தீராத ஆசை கொண்ட Beth, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் தனக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவே நினைத்தார்.

கர்ப்ப பரிசோதனைகளும் எதிமறை முடிவுகளையே கொடுத்திருந்தன.

பின்னர் வலி தொடரவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Beth, 76 மணி நேரத்திற்குபின் அழகிய ஆரோக்கியமான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

குழந்தைகளே வேண்டாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது என் மகள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்கிறார் Beth.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers