மின் உற்பத்தியில் சாதனை படைத்த பிரித்தானியா! 137 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை

Report Print Kabilan in பிரித்தானியா

கடந்த 137 ஆண்டுகளில் முதல்முறையாக மின் உற்பத்தியில் பிரித்தானியா சாதனை படைத்துள்ளது.

பிரித்தானியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொடர்ந்து ஒரு வாரம் நிலக்கரியே இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அனல் மின் நிலையங்கள் மூலமாகக் கிடைக்கும் மின்சாரத்தைத் தவிர்ப்பது கடினமான ஒன்றாகும். பிரித்தானியாவில் 1881ஆம் ஆண்டில் முதல் அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் பல ஆண்டுகளுக்கு நாட்டின் மின்சாரத் தேவைக்கு அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு இருந்து வந்தது.

ஆனால், தற்போது முழுமையாக அது இல்லாமல் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மூலமாகவே கிடைத்து வந்த நிலையில், அதன் பின்னர் மாற்று ஆற்றல் மூலம் மின்சாரம் பெற பிரித்தானியா ஆரம்பித்தது.

அதன்படி, அனல் மின்சாரம் இல்லாமலேயே மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த முயற்சியில், கடந்த 1ஆம் திகதி மின்சாரம் பெறும் இணைப்பில் இருந்து கடைசி நிலக்கரி ஜெனரேட்டரும் நீக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒரு வார காலத்தை அனல் மின்சாரம் இல்லாமல் பிரித்தானியா நிறைவு செய்திருக்கிறது. இதனை National Grid ESO என்ற அமைப்பு உறுதி செய்துள்ள நிலையில், 57 சதவித மின்சாரம் அனல் மின் உதவி இல்லாமல் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் அணு மின் நிலையங்கள் மூலம் 20.5 சதவித மின்சாரமும், காற்று, சூரிய ஒளி மூலமாக 10 சதவித ஆற்றலும் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக ESO அமைப்பின் இயக்குநர் Fintan Slye கூறுகையில், ‘இன்னும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள், மின்சாரம் வழங்கும் அமைப்பில் சேரும்போது, இதுபோல நிலை வழக்கமான ஒன்றாகிவிடும்’ என தெரிவித்துள்ளார்.

கார்பன் வெளியீடு இல்லாமல் மின்சார தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ள பிரித்தானியா, வரும் 2025ஆம் ஆண்டு அதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தற்போது அனல் மின் நிலையங்களின் உதவியின்றி மின்சாரம் தயாரித்திருப்பது கடந்த 137 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். எனவே இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதன்மூலம் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அத்துடன் பிரித்தானியா தற்போது எடுத்திருக்கும் முயற்சி, அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers