விபத்தில் சிக்கியவர்கள் என கருதி தீவிரவாதிகளுக்கு உதவிய பிரித்தானியர்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் லண்டன் பாலம் அருகே பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின்போது பிரித்தானியர் ஒருவர் குறித்த தீவிரவாதிகளுக்கு உதவிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு Richard Livett என்பவர் தமது உறவினர் ஒருவருடன் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை காண சென்றுள்ளார்.

அப்போது Renault Master வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதை கண்டுள்ளார்.

உடனடியாக விபத்துக்குள்ளான வாகனத்தை நெருங்கிய ரிச்சார்ட், அதில் இருந்த பயணிகளுக்கு உதவ முன்வந்துள்ளார்.

ஆனால் அந்த வாகனத்தில் இருந்து வெளியேறிய மூவரில் ஒருவர் அல்லாஹு அக்பர் என குரலெடுத்து கத்தியவாறே ரிச்சார்டின் முதுகில் கத்தியால் ஓங்கி தாக்கியுள்ளார்.

அந்த வாகனம் விபத்துக்குள்ளானதும், அதில் இருந்த பயணிகளை மீட்கவே தாம் முயற்சித்ததாகவும், ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பது தமக்கு தெரியாமல் போனது எனவும் ரிச்சார்ட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்களை நெருங்கியதாகவும், ஆனால் அவர்கள் அல்லாஹு அக்பர் என கத்தியவாறே தம்மை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிய ரிச்சார்ட், அருகாமையில் இருந்த மது விடுதிகள் மற்றும் உணவங்களின் கதவுகளை தட்டி உதவ கோரியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த உணவங்கள் ஏற்கெனவே மூடப்பட்டிருந்தது என ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது உறவினர் மருத்துவர் மற்றும் ராணுவ வீரர் ஒருவருடனும், சில பெண்களுடனும் சம்பவயிடத்திற்கு வந்ததாகவும், அவர்கள் தமக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாம் உதவ முன்வந்த அந்த 3 தீவிரவாதிகளும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது தமக்கு தெரியவந்தது என ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

2017 ஜூன் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers