குழந்தை பிறந்து 4 நாட்கள் கழித்து தாய் செய்த காரியம்: திட்டி தீர்த்த இணையதளவாசிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தான் ஆசையாக பதிவிட்ட புகைப்படத்திற்கு இணையதளவாசிகளிடம் இருந்து கடும் எதிர்வினையை பெற்றுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த சோஃபி அட்டவுட் (27) என்கிற தாய், குழந்தை பிறந்த 4 பிறந்து 4 நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் வீட்டிலிருந்து தன்னுடைய கணவருடன் வெளியேறியுள்ளார்.

ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற அவர், தன்னுடைய குழந்தையுடன் புகைப்படம் ஒன்றினை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த இணையதளவாசிகள், குழந்தை பிறந்து 4 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அதிகமான முக அலங்காரத்துடன் வெளியில் வந்துள்ளீர்கள்.

பிஞ்சுக்குழந்தையுடன் இன்னும் சிறிது நாட்கள் செலவழிக்க கூட உங்களுக்கு நேரமில்லையா என சரமாரியாக திட்டித்தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதனை பார்த்து மனமுடைந்த சோஃபி அட்டவுட், குழந்தை பிறந்ததும் பெண்கள் ஒரு அறையிலே இருக்க வேண்டும் என்பதை தகர்த்து, மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அந்த படத்தை பதிவிட்டேன்.

ஆனால் அதற்கு இப்படி எதிர்வினைகள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்