நான்கு பெண்களை மணந்த பிரித்தானிய கோடீஸ்வரர்... அவரின் குணம் குறித்த உண்மையை உடைத்த நான்காம் மனைவி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான பிரட்டி ஸ்டர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரரான பிரட்டி ஸ்டர் (76) பிரபல நடிகராகவும் திகழ்ந்தார். இவர் கடந்த 9ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

பிரட்டி நான்கு முறை திருமணம் ஆனவர். சோபி லீ (37) என்ற பெண்ணை 2013-ல் நான்காவதாக பிரட்டி திருமணம் செய்த நிலையில் 2015-ல் பிரிந்தார்.

ஆனாலும் பிரட்டியின் இறுதிகாலத்தில் சோபி அவருடன் தான் இருந்தார்.

சோபி வீட்டில் எல்லாமே விசித்திரமாக தான் இருக்கும் என அவர் வீட்டில் வேலை செய்த சூயி இங்கில்பீல்ட் என்ற பெண் கூறுகிறார்.

அவர் கூறுகையில், பிரிட்டிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், அவர் என்னை அடிக்கடி சிரிக்க வைப்பார்.

ஆனால் அவர் போதை மருந்துகளுக்கு அடிமையானவராக இருந்தார். அவர் வீட்டை சுத்தம் செய்யும் வாஷிங்மெஷினில் £50 நோட்டுகள் அதிகளவு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அங்கே எதற்காக அவர் பணத்தை வைத்திருப்பார் என எனக்கு தெரியாது. அவர் செயல்கள் வினோதமாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

பிரிட்டியின் நான்காவது மனைவி சோபி கூறுகையில், ஏற்கனவே ஒரு முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அப்போது என்னிடம் வந்து எனக்கு நெஞ்சு வலிக்கிறது, நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறினார்.

நான் உடனே அவரிடம், நான் காரை ஓட்டுகிறேன் வாருங்கள் என கூறினேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை, அவரே காரை ஓட்டி கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

நெஞ்சு வலியின் போது காரை ஓட்டினால் விபத்து ஏற்படும் என கூறியும் அவர் கேட்கவில்லை.

சொந்த மனைவியான என்னை கூட அவர் நம்பவில்லை, இப்படி தான் பல சமயங்களில் அவர் நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்