பிரித்தானியா கடலுக்கடியில் இருந்த ஜேர்மனியின் மர்ம சுரங்கம்.. அதிகாரிகள் வெளியிட்ட வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா கடலுக்கடியில் இருந்த இரண்டாம் உலக போர் வெடிகுண்டை, பிரித்தானியா ராயல் கடற்படை அதிகாரிகள் எவ்வித பாதிப்பின்றி வெடிக்கச் செய்துள்ளனர்.

தென்மேற்கு பிரித்தானியாவில், டசெட் தீவின் கடற்கரையின் மேற்குப் பகுதியில் கடலுக்கடியில் இருந்த 907 கிலோ கொண்ட வெடிகுண்டு சுரங்கத்தை, வெடிக்குண்டு அகற்றும் நிபுணர்கள் குழு உடவியுடன் வெடிக்கச்செய்துள்ளனர்.

அப்பகுதியல் மீன் பிடி கப்பல் ஒன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் வலையில் இரண்டு மீட்டர் நீளமுள்ள போர்த் தளவாடங்கள் சீக்கியுள்ளது. இது குறித்து மீனவர்கள் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் உடனே அப்பகுதியில் கடலுக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, இரண்டாம் உலக போர் கால 907 கிலோ வெடிகுண்டு கொண்ட கடல் சுரங்கம் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, வெடிக்குண்டு அகற்றும் நிபுணர்கள் குழு உதவியுடன் பிரித்தானியா ராயல் கடற்படை அதிகாரிகள் கடல் சுரங்கத்தை பாதிப்பின்றி வெடிக்கச் செய்து அழித்துள்ளனர். இது ஜேர்மனியுடைய பழைய கடல் சுரங்கம் போல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்