ஒரு குறுஞ்செய்தியால் கலைந்து போன பிரித்தானியரின் காதல் கனவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது காதலியைக் காண்பதற்காக அமெரிக்காவுக்கு சென்ற ஒரு பிரித்தானியரின் மொபைல் போனிலிருந்த ஒரு குறுஞ்செய்தியால், அவரது காதல் வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Hastingsஐச் சேர்ந்த Isaac Roblett (24), தனது அமெரிக்க காதலி Camila Iglesia (23)வைக் காண்பதற்காக அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார்.

விசா இன்றி அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் ESTA உரிமம் பெற்று அவர் அமெரிக்கா சென்றார்.

ஆனால் அமெரிக்கா வந்திறங்கிய Isaac, தனக்கு பெருத்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் காத்திருப்பதை அறியவில்லை.

Isaacஐ விசாரித்த புலம்பெயர்தல் அலுவலர்கள், அவரது மொபைல் போனை ஆராய்ந்தனர். அந்த போனில் Isaac தனது காதலிக்கு அனுப்பியிருந்த ஒரு குறுஞ்செய்தியில், அமெரிக்காவுக்கு வரப்போவதாக ஒரு செய்தி அனுப்பியிருந்தார் அவர். "I am moving to be with you" என்று அந்த செய்தி கூறியது.

நான் உன்னுடன் இருப்பதற்காக புறப்படுகிறேன், என்ற பொருளில்தான் அவர் அந்த செய்தியை அனுப்பியிருந்தார் என்றாலும், moving என்பதன் பொருள் குடிபெயர்தல் என தவறாக புரிந்து கொண்ட அதிகாரிகள், Isaac அமெரிக்காவிலேயே நீண்ட காலம் தங்கப்போவதாக எண்ணிக்கொண்டார்கள்.

இதனால் ஜன்னலோ, சரியான கழிவறை வசதியோகூட இல்லாத ஒரு சிறை அறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரம் விசாரிக்கப்பட்டார் Isaac.

மறுநாள் அவரது காதலியைக்கூட சந்திக்க அனுமதிக்காமல் Isaacஐ நாடு கடத்திய அதிகாரிகள், வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவுக்குள் நுழையவும் அவருக்கு தடை விதித்தனர்.

தனது காதல் என்ன ஆகுமோ என்று கவலையில் மூழ்கிப்போயிருக்கும் Isaac, தனது காதலியை பார்க்கக்கூட முடியவில்லையே என்கிறார் ஏக்கத்துடன்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்