ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் ஐஎஸ் இயக்கத்தில் இணைய கிளம்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹன்சாலா பட்டேல். மாணவரான இவர் பிரித்தானியாவின் Leicester நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக ஹன்சாலா சிரியா புறப்பட்டுச் சென்ற போது பொலிசார் அவரை கடந்த 2017 ஜூலை 1ஆம் திகதி சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

அவர் மீதான வழக்கு பர்மிங்காம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வந்துள்ளது. அதன்படி ஹன்சாலாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers