பிரித்தானியா அரசியல் தலைவர் மீது தாக்குதல்.. மர்ம நபர் கைது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஐரோப்பியன் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புரோ பிரெக்ஸிட் கட்சி தலைவர் நைகல் ஃபார்ரேஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நியூகேஸில் நகரில் நைகல் ஃபார்ரேஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர் அவர் மீது மில்க் ஷேக்கை ஏறிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட 32 வயதான பால் குரோஹெரை கைது செய்து வழக்கு பதிவுசெய்துள்ளதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து நைகல் ஃபார்ரேஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், துரதிர்ஷ்டவசமாக சில சாதாரணமானவர்கள் தீவிரமயமாக்கப்பட்டுவிட்டன, சாதாரண பிரச்சாரமானது சாத்தியமற்றதாகிவிட்டது.

ஒரு நாகரீக ஜனநாயகத்திற்காக பாடுபடும் போது பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும், வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்காத அரசியல்வாதிகள் இதை வழிநடத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தலைவர்களில் நைகல் ஃபார்ரேஜ்-ம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஃபார்ஜே புதிதாக தொடங்கியுள்ள புரோ பிரெக்ஸிட் கட்சிக்கு, இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தலில் பிரித்தானியாவில் பெருமளவில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers