இளவரசர் ஹரிக்கு முன்னர் மேகன் மெர்க்கல் திருமணம் செய்துகொள்ள தெரிவு செய்த பிரித்தானியர்: வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இளவரசர் ஹரியை சந்திக்கும் முன்னர் மேகன் மெர்க்கல் பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம் ஒருவரை காதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் தெரிவு செய்திருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி கடந்த 2018 மே மாதம் 19 ஆம் திகதி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இருவருக்கும் ஆர்ச்சி என்ற பெயரில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் இருவருக்கும் திருமணமான நாளில் இருந்தே பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், 37 வயதான மேகன் மெர்க்கல் பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்டதில் ஒரு பின்னணி இருப்பதாக பிரபல பிரித்தானிய பத்திரிகையாளர் லிஸி கண்டி(50) அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த நேர்முகத்தில், தமக்கும் மேகன் மெர்க்கலுக்கும் இடையேயான நட்பு 2013 ஆம் ஆண்டில் இருந்தே தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து ஒன்றில் பல பிரபலங்களுடன் மேகன் மெர்க்கலும் கலந்துகொண்டதாகவும்,

அப்போது லிஸியிடம் பேசிய மேகன், பிரபலமான பிரித்தானிய ஆண்கள் யாரையேனும் தெரியுமா உங்களுக்கு? நான் பிரித்தானிய ஆண்களை மிகவும் விரும்புகிறேன், திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றாராம்.

இதற்கு பதிலளித்த லிஸி, நாம் கண்டிப்பாக தேடுவோம் என்றாராம். இந்த உரையாடல் நடைபெறும் 3 மாதம் முன்னரே தமது கணவர் 42 வயதான ட்ரெவர் ஏங்கல்சனை மேகன் மெர்க்கல் விவாகரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில் பிரித்தானிய கால்பந்து நட்சத்திரமான ஆஷ்லே கோல்(38) தொடர்பில் மேகன் மெர்க்கலிடம் லிஸி குறிப்பிட்டுள்ளார்.

ஆஷ்லே கோல் அப்போதுதான் தமது மனைவியும் பாடகருமான செரில் கோல் என்பவரிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்.

ஆஷ்லே கோலின் புகைப்படத்தை மேகனிடன் காட்டியபோது, மிகவும் உற்சாகமடைந்த மேகன், மிகவும் அழகாக இருக்கிறார், ஆனால் இவருக்கு சமூகத்தில் குறிப்பிட்ட நற்பெயர் இருக்கிறதா எனவும் அக்கறையுடன் விசாரித்துள்ளார்.

ஆனால் பல காரணங்களால் ஆஷ்லே கோல் உடனான மேகன் மெர்க்கலின் சந்திப்பு நிறைவேறவில்லை என லிஸி தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியை சந்தித்த மேகன் மெர்க்கல், நட்பில் தொடங்கிய அந்த சந்திப்பு காதலாகி பின்னர் திருமணத்தில் முடிவடைந்தது.

மேகன் தம்முடன் 2016 வரை தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் காதல் விவகாரம் தொடர்பில் தாம் இளவரசர் ஹரியிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள லிஸி,

இதை மேகனிடம் தாம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் ஆம், நாங்கள் முயற்சி செய்தோம் என பதிலளித்துள்ளாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்