12 வயதில் பணத்துக்காக முன்பின் தெரியாத ஆணுடன் தனது தாயால் அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் இன்றைய நிலை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பள்ளிச்சீருடை கூட மாற்றாத ஒரு சிறுமியை அவள் 12 வயதாக இருக்கும்போது ஒரு ஆணிடம் 50 பவுண்டுகளுக்காக அனுப்பி வைத்த ஒரு தாயால் அவளது எதிர்காலமே தலைகீழாக மாறிப்போன கதையைக் கூறுகிறது இந்த செய்தி.

Blackpool பகுதியில் சிறார் பாலியல் தொழில் அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகவே காணப்பட்ட சோகத்தை சொல்கிறார் Tyne Yates (29).

பள்ளிக்கு சென்று விட்டு தனது தாயுடன் வீடு திரும்பும்போது பாலியல் தொழில் செய்து வந்த Tyneஇன் தாயை ஒரு ஆண் அணுகி, தாய்க்கு பதில் Tyneஐ தன்னுடன் அனுப்பினால் அதிக பணம் தருவதாக கூறியிருக்கிறான்.

Tyneஇன் தாய், தனது மகளிடம் ஒரு பிரச்சினையும் இல்லை, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி அந்த ஆணுடன் அனுப்பி வைத்துள்ளாள்.

அந்த நபர் அவளுடன் பாலுறவு கொண்டபின் கொடுத்த பணத்தில் 10 பவுண்டுகளை தனது மகளுக்கு கொடுத்திருக்கிறாள் அவளது தாய்.

அந்த சிறிய வயதில் பணம் மகிழ்ச்சியைக் கொடுக்க, பணம் தேவைப்படும்போதெல்லாம் உடலை விற்று பணம் சம்பாதித்து, கடைசியில் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிப்போயிருக்கிறார் Tyne.

Tyneஐப்போலவே வாழ்ந்த Charlene Downes என்ற அவரது தோழி, ஒரு நாள் திடீரென மாயமாகியிருக்கிறார்.

காணாமல் போன Charleneஇன் உடல் துண்டுகளாக கொத்தப்பட்டு கபாப் ஆக மாற்றப்பட்டதாகவும், அவளது எலும்புகள் நொறுக்கப்பட்டு டைல்ஸ் ஆக செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

தனது நெருங்கிய தோழியான Charleneஇன் நிலை தனக்கும் ஒரு நாள் நிகழலாம் என அஞ்சுகிறார் Tyne.

தனது போதைக்கு அடிமையான தாயால், இன்று தெருவில் நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியாக மாறி வாழ்விழந்துபோன Tyneஇன் தாத்தாவும் பாட்டியும், ஒரு காலத்தில் அவர் வாழும் அதே நகரில் மேயர்களாக பணியாற்றியவர்கள் என்பதை எண்ணும்போது, Tyneஇன் இன்றைய நிலையைக் குறித்து பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்