லண்டனில் குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள்... வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில் மனித தாடை எலும்புகள் பற்களுடன் கிடைத்துள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில் உள்ள குப்பை தொட்டி பையில் நேற்று காலை 11 மணிக்கு மனித தாடை எலும்புகளுடன் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதோடு கால் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கழிவுகளை இடம்மாற்றும் போது எலும்புகள் கிடைத்தது தெரியவந்தது.

இது கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புகளாக இருக்குமோ என கருதிய பொலிசார் தடய நிபுணர்களை வரவழைத்தார்கள்.

இந்நிலையில் அந்த எலும்புகள் பல்மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக பயிற்சி எடுத்த போது உபயோகிக்கப்பட்டவைகள் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தாடை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற பல் மருத்துவரை தொடர்பு கொண்டோம்.

கடந்த 1960களில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு மருத்துவ பயிற்சிக்காக எடுத்து வரப்பட்ட எலும்புகள் தான் அவை என மருத்துவர் கூறினார்.

இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை சந்தேகத்திற்குரியதாக கருதவில்லை என தற்போது பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்