மேகன் மீது ஹரியின் நண்பர்கள் பலருக்கு கோபமாம்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் நண்பர்கள் பலருக்கும் அவரது மனைவி மேகன் மீது கோபமாம்! காரணம் என்ன தெரியுமா?

ஹரியின் நண்பர்கள் பலரும் மேகன் ஹரியை ஓவர்டேக் செய்து விட்டதாக கருதுகிறார்களாம்.

ராஜ குடும்ப வரலாற்றை எழுதும் எழுத்தாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹரியின் நண்பர்கள் வட்டத்தில் மேகன் பிரபலம் இல்லை அன்று கூறும் அவர், தங்கள் பிரியமான நண்பர் ஹரியை மேகன் ஓவர்டேக் செய்துவிட்டதாக கருகிறார்கள் என்கிறார்.

ஹரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான பிரித்தானிய எழுத்தாளரான Angela Levin, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது சமூகம் தொடர்பான மற்றும் பெண்ணியவாத கருத்துகளை துணிச்சலுடன் வெளியிடும் மேகன், ஹரியின் துணைவராக செயல்படவில்லை என்றுகூட சிலர் கருதுவதாக அவர் தெரிவிக்கிறார்.

ஹரியின் பல நட்பு வட்டாரங்களில் மேகன் பிரபலமில்லை, காரணம், அவர்கள் ஹரியை மிகவும் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், ஆனால் மேகன் ஹரியை பின்னுக்கு தள்ளி, தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவதாக அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார் Angela.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்