வீடியோ கேம் விளையாடுவதற்காக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

15 வயது பிரித்தானிய சிறுவன் ஒருவன் வீடியோ கேம் விளையாடுவதற்காக தனது பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியுள்ளான்.

Benjy Fish என்னும் அந்த சிறுவன், இதுவரை வீடியோ கேம் விளையாடி மூன்றே மாதங்களில் 25,000 பவுண்டுகள் சம்பாதித்துள்ளான்.

உலகின் குறிப்பிட்ட வீடியோ கேம் விளையாடுவதில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவனாகிய Benjy, உலக கோப்பை வீடியோ கேமிலும் பங்கேற்க இருக்கிறான்.

அந்த போட்டியில் அவன் ஜெயித்தால் அவனுக்கு 23 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைக்கும்.

ஜூலை மாதம் நியூயார்க்கில் இந்த உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது.

அவன் பள்ளிப்படிப்பை நிறுத்த அனுமதித்துள்ள Benjyயின் தாயாரே, விளையாட்டில் அவனது மேனேஜராகவும் உள்ளார்.

Benjyக்கு வீட்டில் வைத்தே ஆசிரியர்களைக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Benjy இந்த வயதிலேயே தனது ஆசிரியர்களை விட அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான் என அவனது ஆசிரியர்கள் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers