பிரித்தானிய இளவரசி டயானாவின் மரணத்தை நேரில் பார்த்த தம்பதியின் உயிருக்கு ஆபத்து: வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்து அல்ல என அந்த விபத்தை நேரில் பார்த்த தம்பதி ஒன்று முதன் முறையாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

குறித்த தகவலை வெளிப்படுத்தியதால் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவப்பகுதியில் இரண்டு கருமை நிற கார்கள் காணப்பட்டதாகவும், ஆனால் அந்த கார்கள் தொடர்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த தம்பதிகள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 1997 ஆகஸ்டு மாதம் 31 ஆம் திகதி பாரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி 'லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில்

இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் இறந்தனர்.

இந்த விபத்தில் இளவரசி டயானா இறந்தது தொடர்பில் அடுத்த நாள் பகலிலேயே தகவல் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், விபத்து நடந்த பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பாரிஸ் நகர பொலிசார் அப்போது குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளித்திருக்கும் ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதி, சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு அந்த சுரங்கம் வழியாக சென்றுள்ளனர்.

அந்த மர்ம கார் தொடர்பில் புகார் அளிக்க சென்ற ராபினிடம், போதுமான ஆதாரங்கள் தங்களிடம் தற்போது சிக்கியுள்ளதாகவும், அந்த கார் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அப்போது பாரிஸ் நகர பொலிசார் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி விபத்தில் இறந்துள்ளார், ஆனால் பொலிசார் சாட்சியங்களை விசாரிக்க மறுத்திருப்பது தங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது எனவும் ராபின் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, லண்டனில் 2007 ஆம் ஆண்டு, இளவரசி டயானா மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும் ராபின் தம்பதிகளை அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க, டயானாவுடன் கொல்லப்பட்ட அவரது காதலனின் தந்தை முகமது ஃபெய்ட் தொடர்பு கொண்டதாகவும் ராபின் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது மகனும் இளவரசி டயானாவும் கொல்லப்பட்டார்கள் எனவும், அது விபத்து அல்ல எனவும் முகமது ஃபெய்ட் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers