லண்டன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 550 பவுண்டு வெடிகுண்டு: 1,500 பேர் வெளியேற்றம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் கட்டுமானப்பணி நடக்கும் இடம் ஒன்றில் இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் 1,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

Kingstonஇல் அந்த 550 பவுண்டு ஜேர்மன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ராணுவத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

பொதுவாக இத்தகைய வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்படும்.

ஆனால் ராணுவத்தினர் இந்த வெடிகுண்டை குடியிருப்பு பகுதியிலேயே மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பான முறையில் வெடிக்கச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மக்கள் பெரிய பிரச்சினையோ சத்தமோ இருக்காது என்று நம்பினர்.

ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்கச்செய்யப்பட்டபின் வீடு திரும்பிய மக்கள், தெருவில் இருந்த கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்திருந்ததைக் கண்ட மக்கள் கோபமடைந்தனர்.

தொலைவில் இருந்த வீடுகளில் இருந்தவர்களும் இடி முழக்கம் போன்ற சத்தம் கேட்டதாகவும், வீடுகள் அதிர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த ராணுவத்தினரோ வெற்றிப் பெருமிதத்துடன் சம்பவ இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers