30 அடி உயர ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்த சிறுவன்: தாவி குதித்து காப்பாற்ற சென்ற ஹீரோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 30 அடி உயர ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்த சிறுவனை காப்பாற்ற முதல் நபராக தடைகளை தாண்டி ஓடி சிறுவனை தூக்கிய நபரை ஹீரோ என பாராட்டுகின்றனர் மக்கள்.

நார்த் யார்க்‌ஷையரில் அமைந்துள்ள Lightwater Valley theme park க்கு தனது மகனுடன் சென்றிருந்த Jon Philo, ரோலர் கோஸ்டர் ஒன்றிலிருந்து ஒரு சிறுவன் தூக்கி வீசப்படுவதைக் கண்டார்.

அதிர்ந்து போய் நிற்காமல் உடனே தடைகளை தாண்டி குதித்து ஓடிய Philoவுடன் சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவரும் சேர்ந்து கொள்ள இருவருமாக சென்று அந்த ஆறு வயது சிறுவனை தூக்கியுள்ளனர்.

முகம் முழுதும் காயத்துடன் அந்த சிறுவன் அசைவின்றி கிடந்ததைக் கண்டு அதிர்ந்தாலும், உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவனை அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபின் அவனுக்கு சுயநினைவு வந்து விட்டதாகவும் அவனுக்கு மோசமான காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

அந்த சிறுவன் கீழே விழும்போது அதே ரோலர் கோஸ்டரில் அமர்ந்திருந்த அவனது தாய் கத்தியதையும், முகம் முழுக்க இரத்தத்துடன் அவன் கிடந்ததையும் கண்ட Philo, அந்த காட்சிகளை தன்னால் மறக்க இயலாது என்கிறார்.

இதற்கிடையில் எதுவும் யோசிக்காமல் அந்த சிறுவனை காப்பாற்ற ஓடிச் சென்ற Philoவை ஹீரோ என பிரித்தானிய பத்திரிகைகள் வர்ணித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்