பிரித்தானியா பிரதமராக டிரம்பின் ஆதரவு யாருக்கு தெரியுமா.. வெளிப்படையாக கூறிய அமெரிக்க ஜனாதிபதி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமராக தெரசா மே-விற்கு பதிலாக பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் சிறப்பாக செயல்படுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரித்தானியா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் 12 வேட்பாளர்களில், தெரசா மே-விற்கு பதிலாக போரிஸ் ஜான்சன் சிறப்பாக பணியாற்றுவார் என நான் நினைக்கின்றேன்.

எனக்கு எப்பவுமே அவரை பிடிக்கும், அவர் தான் தெரிவு செய்யப்டுவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர் நல்லவர், மிகவும் திறமையானவர்.

மேலும் பேசிய டிரம்ப், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் கன்சர்வேடிவ் தலைவர்கள் பலர் எனது ஆதரவை கோரினர். பிரித்தானியா பேச்சுவார்த்தைகளை தெரசா மே எப்படி கையாண்டார் என்பதைப் பற்றியும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்