பிரித்தானியாவில் நிர்வாண புகைப்படங்களால் பழிவாங்கப்பட்ட இளம்பெண்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தமது காதலருக்கு நெருக்கமான பெண்ணை பழிவாங்க நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு லண்டனில் குடியிருந்து வருபவர் 26 வயதான ப்ளெரினா டோப்லா. இவரே தமது முன்னாள் காதலின் தற்போதைய காதலியை பழிவாங்க, நிர்வாண புகைப்படங்களால் அசிங்கப்படுத்தியவர்.

அந்த இளம்பெண்ணை சமூகவலைத்தளம் மூலம் தொடர்புகொண்ட டோப்லா, தம்மை ஒரு ஆண் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், அவருடன் நெருங்கிப் பழக வேண்டும் எனவும் தமது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கட்டாயப்படுத்தி, அவரின் நிர்வாண புகைப்படங்களும், குளியலறை காணொளி ஒன்றையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி, அதை அந்த இளம்பெண்ணின் உறவினர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் டோப்லாவின் முன்னாள் காதலருக்கு தெரியவரவே, அது நீதிமன்ற வழக்காக மாறியது. 2017 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில்,

பொலிசார் டோப்லாவை விசாரணைக்காக அழைத்தனர், ஆனால் அவர் இந்த விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்தார்.

இந்த நிலையில், தற்போது பழிவாங்கும் நடவடிக்கையாக அதை தாம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் டோப்லா.

இந்த விவகாரம் தொடர்பில் ஜூன் 28 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், சிறை தண்டனை உறுதி எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்