வீட்டிற்கு வந்த அஞ்சலட்டை... திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த கடிதம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

112 வருடங்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தன்னுடைய வீட்டிற்கு வந்ததால், அதனை பார்த்த பிரித்தானிய பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேலா வெபெர் (24) என்பவரின் வீட்டு முகவரிக்கு ஒரு அஞ்சலட்டை வந்துள்ளது.

அதனை பிரித்து பார்த்தபோது 112 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மைக்கேலா கூறுகையில், அன்றைய தினம் என்னுடைய கணவர் கையில் ஓர் அஞ்சலட்டையுடன் வீட்டிற்கு வந்தார்.

அதிலிருந்து புகைப்படத்தை பார்த்த போது, என்னால் நம்ப முடியவில்லை. அந்த வீட்டின் முன் பேய் இருப்பதாக நினைத்தேன். என்னுடைய அம்மாவும் அந்த படத்தை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தார்.

நான் 2014ம் ஆண்டு முதல் இந்த வீட்டில் இருக்கிறேன். ஆனால் 1907ம் ஆண்டு ராபர்ட் என்பவர் எழுதிய கடிதம் தற்போது எதற்காக எங்களுடைய வீட்டிற்கு வந்துள்ளது என்பது பற்றி ஆராய ஆரம்பித்தோம்.

அப்போது தான் நாங்கள் இருக்கும் வீட்டு முகவரியில், 1990ம் ஆண்டு முதல் 1990வரை வில்ட்ஷயர் என்கிற பெண்மணி வசித்திருந்து தெரியவந்தது. அந்த வீட்டின் முன் நின்று கொண்டிருப்பதும் வில்ட்ஷயர் தான் என்பதை தெரிந்துகொண்டேன்.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்தினம் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், "அன்புள்ள வில்..., செவ்வாய்கிழமை நான் வரவில்லை என்றால் ஏமாற்றமடையாதே. எனக்கு உடல்நிலை சரியில்லை. எல்லாம் நல்லதாய் நடக்கும் என நம்புகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை நாங்கள் தற்போது பத்திரமாக வைத்திருக்கிறோம். விரைவில் வில்ட்ஷயர் குடும்பத்தினரை கண்டுபிடித்து இதனை ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers