பிரித்தானியாவிற்கு செல்லும் டிரம்ப்.. அதிர்ச்சிகொடுக்க தயாராக இருக்கும் பிரித்தானியர்கள்

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோர் மூன்று நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு வருகை தரவுள்ளனர்.

யூன் 3ம் திகதி முதல் யூன் 5ம் திகதி வரை டிரம்ப் பிரித்தானியாவில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், டிரம்பிற்கு எதிராக போராடும் வகையில் அவர் வருகையின் போது 6 மீட்டர் உயரமுள்ள டிரம்பின் குழந்தை உருவம் கொண்ட பலூன் பறக்க விடப்படும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிரம்ப் லண்டனுக்கு வந்த போதும் இதுபோன்று பலூன் பறக்க விடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது நினைவுக்கூரதக்கது. அதே போன்று இந்த வாரமும் டிரம்ப் செல்லும் பகுதிகளுக்கு அருகே இந்த பலூன் பறக்கும் என போராட்ட அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் தனது பயணத்தின் போது பொதுமக்களைத் தவிர்ப்பதற்கு தனது முயற்சியை மேற்கொள்வார், ஆனால் டிரம்ப் குழுந்தை உருவ பலூன் பறக்க விடுவதின் மூலம், அவரது வெறுக்கத்தக்க அரசியலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தெளிவான செய்தியை அவருக்கு உணர்த்துவோம் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers