வெவ்வேறு பெண்கள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தையான கனேடியர்: 15ஆவது குழந்தையின் தாய்க்கு செய்த அநீதி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெவ்வேறு பெண்கள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தையான கனேடியர் ஒருவர், 15ஆவது குழந்தையின் தாயாகிய பிரித்தானிய பெண்ணை கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கனடாவின் ஒண்டாரியோவைச் சேர்ந்த செல்வந்தரான Johnathan Patrick Terry (43), சமூக ஊடகம் மூலம், தான் சந்தித்து பழகிய ஒரு 20 வயது பெண்ணையும், அவருக்கும்அந்த பெண்ணுக்கும் பிறந்த எட்டு மாத பெண் குழந்தையையும் கைவிட்டுச் சென்றுள்ளார்.

12 மாதங்கள் தங்கள் உறவு தொடர்ந்த நிலையில், அவர் அந்த பெண்ணையும்குழந்தையையும் கைவிட்டுச் செல்ல, நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த பெண்.

ஆனால் எந்த வழக்கு விசாரணையின்போதும் Terry நீதிமன்றத்திற்கு வரவேயில்லை என Mark Everall என்னும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம் ஒன்றிற்கு பராமரிப்புத் தொகையாக 10,000 பவுண்டுகளும், வாடகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்காக மொத்தமாக 22,000 பவுண்டுகளும் வழங்குமாறு Terryக்கு உத்தரவிட்டார்.

ஆனால் Terry இதுவரை எந்த ஜீவனாம்ச தொகையையும் அந்த பெண்ணுக்கு வழங்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers