பிரெக்ஸிட் பிறகு கண்டிப்பாக இது நடக்கும்.. தெரசா மே-விடம் உறுதியளித்த டிரம்ப்

Report Print Basu in பிரித்தானியா

மூன்று நாள் பயணமாக பிரித்தானியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரெக்ஸிட் பிறகு பிரித்தானியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கை வேண்டும் என கோரியுள்ளார்.

டிரம்ப் இன்று பிரித்தானியா பிரதமர் தெரசா மே மற்றும் அமெரிக்கா-பிரித்தானியா வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் பேசிய டிரம்ப், நாம் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கை செய்துக்கொள்ள வேண்டும், அது மிகவும் நியாயமான ஒப்பந்தமாக இருக்கும், இது நாம் இருவரும் செய்ய வேண்டிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். நாம் இந்த ஒப்பந்தம் செய்ய போகிறோம்.

பிரித்தானியா பிரதமராக சிறப்பாக செயல்பட்டதற்காக தெரசா மே-வை வாழ்த்திய டிரம்ப், நீங்கள் இன்னும் எத்தனை நாள் அதிகாரத்தில் இருப்பீர்கள் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருங்கள். இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கை செய்துக்கொள்வோம் என உறுதியளித்துள்ளார்.

பிரித்தானியா-அமெரிக்கா நீண்ட கால நட்பு நாடாக இருக்கிறது. நமது நட்பை பலப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமையோடு தெரசா மே பதவிலக உள்ள நிலையில் அவருக்கு பதிலாக பிரித்தானியா பிரதமராக பல பேர் போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்