ஒன்லைன் காதலரை நேரில் சந்திக்க சென்ற இளம்பெண்: அவருக்காக காத்திருந்த நான்கு ஆண்கள்...!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இணையத்தில் சந்தித்து காதல் வளர்த்து, ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என ஆசையாக காதலரை காணச் சென்ற இளம்பெண்ணுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது, காரணம், அங்கு அவருக்காக வாட்டசாட்டமான நான்கு ஆண்கள் கத்திருந்தார்கள்.

பிரித்தானியாவின் Devonஐச் சேர்ந்த Amy Sharp (28) டேட்டிங் இணையதளம் ஒன்றில் James என்ற நபரை சந்தித்து காதலிக்கத் தொடங்கியிருந்தார்.

ஒரு நாள், ஹொட்டல் ஒன்றில் சந்தித்து இரவு உணவு அருந்தலாம் என முடிவு செய்து Jamesஐ வரச்சொல்லியிருந்தார் Amy.

ஆனால் Amy ஹொட்டலுக்கு சென்றபோது அங்கு Jamesஐக் காணவில்லை. அதற்கு பதில் Amy குறிப்பிட்டிருந்த இடத்தில், கார் ஒன்றின் அருகில் வாட்ட சாட்டமான நான்கு ஆண்கள் நின்றிருந்தார்கள்.

குழம்பிப்போன Amy, Jamesக்கு போன் செய்ய, அங்கிருந்த ஒரு நபரின் போன் ஒளிர்ந்ததைக் கண்டார் Amy.

அது James என்ற பெயரில் தான் இணையதளத்தில் பார்த்த நபர் அல்ல, அவர் போலியான போட்டோவை பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிந்ததும், Amyக்கு பயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த நால்வரும் Amyயின் காரை நோக்கி நகர, அங்கிருந்து காரை நகர்த்தி வந்துவிட்டார் Amy.

நிச்சயம் அவர்கள் தன்னுடன் இரவு விருந்து உண்ண வரவில்லை என்பது மட்டும் நிச்சயம் என்று கூறும் Amy, ஏதோ தவறு நடக்க இருந்தது மட்டும் நிச்சயம் என்கிறார்.

தான் ஒரு பெண், அந்த நான்கு ஆண்களிடம் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கூறும் Amy, தனக்கு நேரிட்ட அதிர்ச்சி சம்பவத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து மற்றவர்களை எச்சரித்திருக்கிறார்.

பின்னர் பொலிசாரை Amy தொடர்பு கொள்ள, அவர்கள் கேட்ட முதல் கேள்வி, அவர்கள் உங்களைத் தொட்டார்களா என்பதுதான்.

சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்று கூரும் Amy, தவறு நடந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்றால் எப்படி, அதற்கு முன்னரே தவறை தடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார்.

பிரித்தானியாவைப் பொருத்தவரையில், டேட்டிங் இணையதளங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல, அவற்றில் போலியான பெயரில் உலாவுவதும் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers