பல்லாயிரக்கணக்கான ட்ரம்ப் எதிர்ப்பாளர்களால் செய்ய முடியாததை சாதித்துக் காட்டிய தெரஸா மேயின் பூனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பல்லாயிரக்கணக்கான ட்ரம்ப் எதிர்ப்பாளர்களால் செய்ய முடியாத ஒன்றை ஒரு பூனை சாதித்துக் காட்டியுள்ளது.

அந்த பூனை பிரித்தானிய பிரதமர் தெரஸா மேயின் பூனையான Larry. பிரமாண்ட ட்ரம்ப் பொம்மையுடன், எப்படியாவது ட்ரம்பின் வாகன அணி வகுப்பை தாமதமாக்கி விட வேண்டும் என பல்லாயிரக்கணக்கான ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் லண்டனில் திரண்டிருக்க, அவர்களால் அதை சாத்தியமாக்க முடியவில்லை.

ஆனால் தெரஸா மேயின் பூனையான Larry, ட்ரம்பின் காரின் கீழ் படுத்துக் கொண்டு, எழுந்திருக்க அடம்பிடிக்க, ட்ரம்பின் கார் புறப்படுவது தாமதமாகிவிட்டது.

பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த சம்பவத்தை, ’ட்ரம்பின் காரின் கீழ் அடைக்கலம் புகுந்த Larryயால் பெரும் பாதுகாப்பு பிரச்சினை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் காரை, மிருகம் (the Beast)என்று அழைப்பார்கள். அந்த பயங்கர மிருகத்தையே Larry மிரட்டிவிட்டது.

Larry பிரதமர் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதோடு, பாதுகாப்பு சோதனைகளை மேற்பார்வையிட்டு, வீட்டிலுள்ள புராதன கலைப்பொருட்கள் தூங்குவதற்கு வசதியாக உள்ளனவா என்பதை சோதிக்கும் திறன் வாய்ந்தது என அதன் பயோ டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

எவ்வளவு நேரத்திற்கு Larry ட்ரம்பின் காரின் கீழ் படுத்துக் கொண்டு நகராமல் அடம்பிடித்து ட்ரம்பின் பயணத்தை தாமதம் செய்ததோ தெரியாது, பிறகு ஒரு வழியாக அது அங்கிருந்து நகர, அதற்கப்புறம் தாமதமாகத்தான் ட்ரம்ப் புறப்பட்டாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers